Un vizhi mozhithanil veeltheenadi kanmaniye: உன் விழிமொழிதனில் வீழ்ந்தேனடி கண்மணியே (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
பிறந்த வீட்டாரிடம் கற்று கொண்ட பாடத்தால் பிறரை நம்பவே மறுக்கும் நாயகி கயல்விழியை, தனது வார்த்தை ஜாலங்களின் மூலம் தன் வசப்படுத்தும் மாறன். அவனை நம்பி பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திலிருந்து தப்பித்து வந்தவள் அவனை தேடிச் செல்லும் போது, கண்டது என்னவோ திருமணக் கோலத்தில் இருந்த காதலனைத் தான். அவனும் ஏமாற்றி விட்டதை அறிந்து நொறுங்கிப் போனவள் அடுத்து எடுக்கும் முடிவுகளையும், அதன் காரணமாக ஏற்படும் திருப்பங்களையும் கதையின் போக்கில் காண்போம். இதோ கதையில் இருந்து சில வரிகள் தங்களுக்காக, “மிஸ்ஸஸ் மாறன், நாங்க கேட்டபடி உங்க பையன் கவினோட சர்டிபிகேட்ஸ் எல்லாம் சரியாக இருக்கு, கண்டிப்பா அவனை ப்ளே ஸ்கூல்ல சேர்த்துக்கறோம். பட் ஒரு டௌட், மோஸ்ட்லி எல்லாரும் முதல் முதல்ல குழந்தைங்களை ஸ்கூல்ல சேர்க்கும் போது, அப்பா அம்மா ரெண்டு பேருமா வருவாங்க, ஆனா நீங்க மட்டும் இப்படி தனியா குழந்தையோட வந்திருக்கீங்க? ” “மேம், கவினோட அப்பா ஆன் சைட்ல வொர்க் பண்றாரு, இயர்லி ஒன்ஸ் நாங்க தான் அங்க போயிட்டு வருவோம், அதனால நான் தான் முழுசா இங்க அவனை பாத்துக்கணும்.” “ஓகே மிஸ்ஸஸ் மாறன் ஆபீஸ் ரூம்ல பீஸ் பே பண்ணிட்டு, நாளைக்கே நீங்க பையனை ஸ்கூல்க்கு அனுப்பி வைக்கலாம். அப்பறம் ஒன் வீக்ல மத்த பீஸ்ஸையும் செட்டில் பண்ணிடுங்க.” கையில் இருந்த கொஞ்ச பணத்தை கொண்டு அட்மிஷன் பீஸ்ஸை கட்டியவள். மாத சம்பளம் வருவதற்கு இன்னும் இருபது நாட்கள் ஆகும் என்பதால், ஒரு வாரத்திற்குள் மற்ற கட்டணத்தை எப்படி கட்டுவது என்ற சிந்தனையுடன், கைகளில் தன் மகன் கவினை தூக்கிக் கொண்டு பிளே ஸ்கூலை விட்டு வெளியே வந்தாள் கயல்விழி. எதிரே இருந்த நகை கடையை கண்டவள்,ஒரு முடிவோடு எப்போதுமே தன் கழுத்தில் இருக்கும் தனது அன்னையின் செயினை தொட்டுப் பார்த்துக் கொண்டால். நகை கடையினுள் சென்று தனது செயினை விற்றுவிட்டு, அதற்கான பணத்துடன் சந்தோஷமாக வெளியே செல்ல திரும்பியவள், அங்கு குழந்தைகள் நகைகள் இருக்கும் செக்ஷனில், கையில் நான்கைந்து மாதமே ஆன பிஞ்சு குழந்தையை வைத்துக் கொண்டு நின்றிருந்தவனை கண்டு, அப்படியே நின்று விட்டாள். அவனேதான் தெளிந்த நீரோடை போல சென்று கொண்டிருந்த தனது வாழ்க்கையில், காதல் என்னும் கல்லை எறிந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, வீட்டைவிட்டு வெளியேறி, அவன் தான் இனி தனக்கு எல்லாம் என்று நினைத்து, அவனை தேடிச் சென்ற போது, கல்யாண மாப்பிள்ளையாக தனக்கு காட்சிக் கொடுத்தவன். வாழ்க்கையில் எவரையுமே நம்ப கூடாது என்று இருந்தவளை, பேசிப் பேசியே என் வாழ்நாளின்இறுதி மூச்சு உள்ளவரை, உனக்கானவனாக நான் இருக்கிறேன்… என்று காதல் மொழி பேசி பேசியே, நம்பிக்கை துரோகத்தின் மொத்த அடையாளமாக நின்றவன். தனது மகன் மட்டும் அன்று இல்லை என்றால், எப்போதோ தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பாள். இப்போது கூட அதிர்ந்துபோய் நின்றிருந்தவளை, அம்மா என்று கூறி தன்னிலைக்கு திருப்பிய மகனை, கண்ணீரோடு அணைத்தபடி, மீண்டும் ஒருமுறை இளமாறனையும், அவன் அருகில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரியின் வகுப்புத் தோழியான மஞ்சுவையும் வெறித்த பார்வை பார்த்து விட்டு, வெளியே சென்றுவிட்டால் கயல்விழி.