நிலவுக்கு வான் உறவோ! (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
beautiful romance storyஅவனுக்கோ..விழிகள் திறந்ததும் வானமே புலப்பட.. எங்கும் அந்தகாரம்!!வானில் ஒற்றை நிலவு மட்டுமே பவனிவர.. அதன் விளைவாக சிறுகீற்று போல வெளிச்சம்..அவ்விடமெங்கனும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அவதானித்தான் அவன். அவன் படுத்திருக்கும் புற்தரையின்.. பனியின் குளிர்மை அவனது உடலை ஜில்லென்று குத்திக் கொண்டிருப்பதை அவனால் உணர முடியுமானதாக இருந்தது. சுயநினைவு தெளிந்தவனுக்கு.. முதலில், ‘எங்கிருக்கிறோம்?’ என்று புரியாத நிலை!! ஆயினும், அவனது வீரியம் மிக்க மூளை.. கார் விபத்திற்குள்ளான அந்திம நொடி வரை நிகழ்ந்தேறிய அனைத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றது தான் தாமதம். மல்லாக்காகப் படுத்திருந்த நிலையிலும் உருண்டு அசைந்த கருமணிகளோ.. தன் மனையாளைத் தான் தேடலானது. அதோ.. எதிரே சற்றே உதிரக் கீறல்கள் கொண்ட சருமத்துடன் மனையாளின் மதிமுகம்!!ஏற்கனவே விபத்தின் தாக்கத்தில் நின்றும் வெளிவந்திராதவன் அல்லவா அவன்? தன் மனையாளின் பாதுகாப்புப் பற்றியே விழி திறக்கும் வேளையிலும், சிந்தித்தவன்.. அவளைக் கண்டுகொண்டதும், அப்படியே இழுத்து நெஞ்சாங்கூட்டோடு அணைத்துக் கொண்டான். ஏதோ படுபயங்கரமான கெட்ட கனவில் நின்றும் விழித்தாற் போல, அவன் முகமெல்லாம் பதற்றத்தின் சாயைப் படர்ந்திருந்தது. “ருத்.. ரா” என்ற அவனது கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரல் அவளது இதயத்தின் அடி ஆழம் வரை சென்று தாக்கி.. உருகச் செய்யும் போலிருந்தது.
அவனுக்கோ..விழிகள் திறந்ததும் வானமே புலப்பட.. எங்கும் அந்தகாரம்!!
வானில் ஒற்றை நிலவு மட்டுமே பவனிவர.. அதன் விளைவாக சிறுகீற்று போல வெளிச்சம்..அவ்விடமெங்கனும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அவதானித்தான் அவன்.
அவன் படுத்திருக்கும் புற்தரையின்.. பனியின் குளிர்மை அவனது உடலை ஜில்லென்று குத்திக் கொண்டிருப்பதை அவனால் உணர முடியுமானதாக இருந்தது.
சுயநினைவு தெளிந்தவனுக்கு.. முதலில், ‘எங்கிருக்கிறோம்?’ என்று புரியாத நிலை!! ஆயினும், அவனது வீரியம் மிக்க மூளை.. கார் விபத்திற்குள்ளான அந்திம நொடி வரை நிகழ்ந்தேறிய அனைத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றது தான் தாமதம்.
மல்லாக்காகப் படுத்திருந்த நிலையிலும் உருண்டு அசைந்த கருமணிகளோ.. தன் மனையாளைத் தான் தேடலானது.
அதோ.. எதிரே சற்றே உதிரக் கீறல்கள் கொண்ட சருமத்துடன் மனையாளின் மதிமுகம்!!
ஏற்கனவே விபத்தின் தாக்கத்தில் நின்றும் வெளிவந்திராதவன் அல்லவா அவன்?
தன் மனையாளின் பாதுகாப்புப் பற்றியே விழி திறக்கும் வேளையிலும், சிந்தித்தவன்.. அவளைக் கண்டுகொண்டதும், அப்படியே இழுத்து நெஞ்சாங்கூட்டோடு அணைத்துக் கொண்டான்.
ஏதோ படுபயங்கரமான கெட்ட கனவில் நின்றும் விழித்தாற் போல, அவன் முகமெல்லாம் பதற்றத்தின் சாயைப் படர்ந்திருந்தது.
“ருத்.. ரா” என்ற அவனது கரகரத்த டெஸ்டெஸ்டரான் குரல் அவளது இதயத்தின் அடி ஆழம் வரை சென்று தாக்கி.. உருகச் செய்யும் போலிருந்தது.