தீராக்காதலால் ஜனனம் : Theeraakkaathalaal jananam (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
கதையின் கரு :காதலெனும் தோல்வியைச் சந்தித்த துருபதன் அதை மறக்கவே புதிதாக தன் வாழ்க்கையை ஆரம்பிக்க, விதியோ உறவுகள் மூலம் இக்கட்டுக்கு தள்ளியது. தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாது பெண்ணவளைக் காயப்படுத்த, அந்த காயமே அவனுக்கு மறுவாழ்க்கை கொடுக்குமா ?விபரம் தெரிந்த வயதிலிருந்தே தன்னவனை மட்டுமே மனதில் சுமந்து மங்கையவள் இருக்க, அவனுக்கோ வேறொருத்தியோடு திருமணமெனும் செய்தி. அதனை ஏற்க முடியாது அவள் பட்ட துயரங்களுக்கு எல்லாம் முடிவு தான் என்ன ?கனவிலும் கூட நினைக்காத கணவனே நம்பிக்கை துரோகம் செய்து விட, அதிலிருந்து மீள முடியாது தவிக்கும் பேதையவளுக்கு அவளின் உதிரத்தில் இருந்து ஜனித்த மரகதபூவான மகள் மனம் ஆறுதல் கொடுத்தாள். அதையும் நீடிக்க விட மாட்டேன் என்பதுப் போல் புயலாய் கயவன் வர என்ன தான் ஆகியிற்று ?துரியதனாய் இருந்தாலும் தனக்குள்ளும் மனம் இருக்கிறது என்பதை உணர்ந்தவனுக்கு காலம் கடந்து தான் தெரிந்தது தவற விட்டோம் பொக்கிஷத்தை. மீண்டும் மீட்டெடுக்க முயற்சிப்பானா ?குடும்பத்துக்காக தங்களின் காதலை தியாகம் செய்ய துணிந்த ஜோடிகளுக்கு அது முடியாமல் போக, நடுக்கடலில் தவிக்கும் நிலை தான் அவர்களுக்கு.இப்படி தனித்தனியாக மனதால் தவிக்கும் இவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சமெனும் மறுபிறவி கொடுத்து ஜனனிக்க வைப்பது தான் நம் தீராக்காதலால் ஜனனம் நாவல்.கிராமத்து பழக்க வழக்கங்கள் கொண்ட அழகான குடும்ப உறவுகளோடு இணைந்து மகிழ்ச்சி தரும் தித்திப்பு. மோகத்தீஅணையுமாடி கதையின் அடுத்த பாகமாக தீராக்காதலால் ஜனனம் கதையை படிக்க தயாராகுங்கள்.