திசை மாறும் காற்று : சீஸன் 1 & 2 (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Simultaneous device usage | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
டீஸர்தர்மன் ஒரு ஆல்பா ஆண். தன் குடும்பத்திலும் தன்னுடைய அரசியல் வாழ்விலும் அவன் நகர்த்தும் காய்கள் குடும்பத்தினருக்கும் அவனை நம்பி வாழும் இணைக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர மறுப்பவன் வாழ்வின் காற்று திசை மாறிய போது அவன் என்னவாகிறான்?பொதுவாக கதைகளில் வரும் ஒரு கதாநாயகன் ஆணழகனாக இளமையானவனாக நல்லவனாக அடுத்தவர்களுக்கு நல்லதே செய்பவனாக, மனைவியை மட்டும் நேசிப்பவனாக, குடும்பத்தை தாங்குபவனாக பெற்றோரை பூசிப்பவனாக என்றெல்லாம் தான் இருப்பார்கள் இல்லையா! ஆனால் இந்த கதையின் நாயகன் தர்மனோ இப்படி எந்த இலக்கண வரையறைக்குள்ளும் பொருந்தாதவன். ஏனெனில் இவன் கதாநாயகன் அல்ல. கதையின் நாயகன் மட்டுமே.கௌரவர்களுக்கு பங்காளிகளான பாண்டவர்களிடைத்தில் ஏற்பட்ட பொறாமை மகாபாரத போரை உண்டாகியது. உலகத்தின் முதல் மனிதன் ஆதாமிற்கு இரு மகன்கள். சொந்த தம்பி மீது கொண்ட பொறாமையினால் அவனைக் கொன்று விடுவான் அண்ணன். சகோதர பொறாமை அதாவது சிபிலிங்க்ஸ் ஜெலசி என்பது உலகம் தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது.இந்த கதையிலும் அண்ணன் தர்மன் தன் தம்பி தாமுவிடம் கொண்ட பொறாமையினால் அவன் செய்யும் அக்கிரமங்களும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகளும் விவரிக்கும் கதை இது. இறுதியில் தர்மன் என்னவாகிறான் என்பது தான் கதையின் அதி முக்கியமான விஷயம்.வலிமை வாய்ந்த மனிதனின் அத்தனை செயல்களுக்கும் பதிலுக்கு பதில் செய்ய பலகீனமான மனிதர்களால் எப்போதும் முடிந்து விடாது. ஆனால் தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இறுதியில் தெய்வம் தான் தீர்ப்பை எழுதுகிறது. தெய்வத்தின் தீர்ப்பே இறுதியானது. அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று தானே கொல்லும்!அதர்மமும் அநீதியும் செய்பவனை பனைமரத்தைப் போல ஓங்கி உயர்ந்து வானை முட்டி விடுவதை போலத் தான் வளர்த்துக் கொண்டு போவார் கடவுள். அந்த பனைமரத்தின் கீழே யாரும் ஒண்டுவதற்கோ ஒதுங்குவதற்கோ நிழல் இருக்காது. காற்றுக்கு மற்ற மரங்கள் எல்லாம் கிளையை முறித்துக் கொண்டேனும் காற்றையும் புயலையும் எதிர்த்து நிற்கும். ஆனால் பனை மரமோ அடியோடும் வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ந்து விடும். அதைப் போலத் தான் அக்கிரமக்காரர்களை யாராலும் எதிர்த்து வென்றிட இயலாத வலிமையுடன் தான் ஓங்கி உயர்த்துவார் கடவுள். ஆனால் அதுவே அவன் அழியும் நேரம் வரும் போது அவனை வேரடி மண்ணோடு சாய்த்து விடுவார். இது தான் தெய்வ நீதி. பொயட்டிக் ஜஸ்டிஸ் என்பது.