கரையுடைக்கும் கணமொன்றில் : Karaiyudaikkum Kanamonril (Tamil Edition)
Publisher | Rosei Kajan (23 May 2024) |
---|---|
Language | Language |
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
வணக்கம் வாசக நட்புக்களே!இன்னுமொரு கதையோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!தாய், தன்னை ஒறுத்து வாழ்பவள் அதுவும் பிள்ளைகள் என்று வருகையில் தன்னை மறந்து அவர்களுக்காவே வாழ்பவள் என்று பொருள் கொள்வதே வழக்கம். இதற்கு எதிர்மறையாக எத்தனையோ நடப்பதுண்டு. அப்படியொரு தாய் மகள் உறவோடு, ரசித்து வாசிக்க வைக்கும் வகையில் காதல் நட்பு என்று கலகலப்பாகக் கதை நகர்கிறது. எச்சூழ்நிலை என்றாலும் நிமிர்வாக எதிர்கொள்ள முனையும் நாயகியும் தான் கொண்ட நேசத்தின் கரை உடையும் கணத்துக்காகச் சீண்டிக்கொண்டே காத்திருக்கும் நாயகனும் அவர்களின் கதையும் உங்களை ஏமாற்ற மாட்டர்கள் என்று நம்புகிறேன். வாசித்துவிட்டுச் சொல்லுங்களேன். உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றும் தொடர்ந்து எழுதவும் எழுத்தை மெருகேற்றவும் உதவும். பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் ரேட்டிங் இடவும் மறக்காதீர்கள். கதையில் இருந்து….—————————————————கவினியோ, பற்களைக் கடித்துக்கொண்டு நின்றவள், அவனே எதிர்பாராத விதமாக கை நிறைய அள்ளிய பனியை அவன் முகத்தில் வீசியெறிந்தாள். “ஏய் …”அவன் விலக முதல் மீண்டும் மீண்டும் அள்ளி எறிந்தாள். இயலும் இதை எதிர்பார்க்கவில்லை. பட்டென்று விலகி நின்று தன் கைப்பேசியில் வீடியோவாக்கினாள்.சேந்தன் அப்படியே கவினியைப் பிடித்து பனியில் உருட்டி விட , “அண்ணா விசரா உங்களுக்கு?” என்று வந்தவளும் அதே பனியில் உருட்டப்பட்டாள்.“ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு விளையாட்டா காட்டுறீங்க?” பனிக்குவியலில் விழுந்தவர்களை எழவிடாது பனியால் குளிப்பாட்டினான், சேந்தன். அவன் மனம் பஞ்சிபோல் இலகுவாகத் துள்ளிக் குதித்திட்டு. “அண்ணா ப்ளீஸ், உங்களுக்கு என்ன விசரே? ஐயோ பல்லுக்கிட்டுது! இங்க பாருங்க, அம்மா கோல் பண்ணுறா!” கத்தினாள், இயல். கையில் அள்ளிய பனியை இயல் மீது கொட்டாது நிதானித்தவன், மறுகணமே எழ முயன்ற கவினியில் அதைக் கொட்டினான். “அய்யோம்மா!” கத்திக்கொண்டு எழுந்தவள் என்ன செய்கிறாள் என்று உணர முன்னரே கையிரண்டிலும் அள்ளியிருந்த பனியை சேந்தன் முகத்தில் அடித்திருந்தாள். அப்படியும் கோபம் குறையவில்லை. கோபமா? அப்படித்தான் அவள் நினைத்துக்கொண்டாள். முகமோ வேறு கதை சொன்னது. அந்தளவு மகிழ்வை, சீண்டலை அவள் முகத்தில் இதுவரையில் கண்டதில்லை. மீண்டும் கைகள் கொள்ளாது பனியைக் கூட்டி அள்ளிக்கொண்டவள், அப்படியே அவன் முகத்தில் தேய்த்து விட்டாள்.“டேய்ய்ய்ய் …கவினி வேணாம் …” ஒரு கையால் முகத்தைத் துடைத்தபடி அவளை எட்டிப்பிடித்துக்கொண்டான், சேந்தன். அதே வேகத்தில் கழுத்தோடு கைபோட்டு இறுக்கிப் பிடித்துக்கொண்டவன், “அண்ணாவோட தான்மா நிக்கிறன். வரக் கொஞ்சம் லேட்டாகும். சாப்பாடு வெளில சாப்பிடுறம். ஓம் ஃப்ரெண்ட்ஸ் நிக்கினம்.” என்று சகோதரி சொல்ல, கவினியைப் பார்த்தான். அதேநேரம், அவன் நெஞ்சோடு நெரிபட்டு நின்றவளும் நிமிர்ந்து அவனைத்தான் பார்த்தாள்.“இப்ப நிவேதா அன்ரிட்ட என்னோட நிக்கிறன் எண்டதச் சொல்லேலுமா உங்களால? ஏலாது எல்லா சேந்தன். பிறகு இது…எப்பிடி? ப்ளீஸ் என்ன விட்டிருங்க!”பனியில் குளித்து நின்றவள் விழிகள் கலங்கச் சொன்னாள். அவள் தேகச் சூட்டுக்கு முகத்தில் ஒட்டி நின்ற பனி உருகி, கசிந்த கண்ணீரோடு கலந்து வழிந்தது. பதில் சொல்லாது ஆழ்ந்து பார்த்து நின்றான், சேந்தன். “இப்பவும் கொஞ்சம் சரி என்னில, எங்களுக்க இருக்கிற அன்பில நம்பிக்கை வரேல்லையா? எனக்கு மலையளவு இருக்கு. இப்பிடியெல்லாம் சந்தேகமோ, ஆரையும் பாத்துப் பயமோ எனக்குள்ள வரேல்ல கவினி. ஈஸியா விட்டிரலாம் எண்டு மட்டும் நினையாதீர்!” அவள் விழிகளுள் பார்த்தபடி சொன்னான்.அழைப்பைத் துண்டித்த இயலோ, “ வாவ்! இதல்லோ போஸ்!”அவர்கள் இருவரையும் சுற்றி சுற்றிப் புகைப்படங்களை எடுக்க, அவன் சொன்னவற்றை உள்வாங்கி உதடுகள் துடிக்கக் கசிந்த கண்ணீரை மறைக்காது பார்த்து நின்றவள் கழுத்திலிருந்து கரத்தை விலக்கியவன், “போகலாம், வாங்க” காரை நோக்கி விறுவிறுவென்று நடந்தான்.