ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!: Mr.கோபக்காரன் Weds Miss.சிடுமூஞ்சி (Tamil Edition)
Language | Tamil |
---|---|
File size | |
Text-to-Speech | |
Screen Reader | |
Enhanced typesetting | |
Word Wise | |
Print length |
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!A family romance about enemies who become lovers, and their journey from hate to love.நாயகன்: “வேதாந்த் அதிமதுரன்”பெயரில் மட்டுமே, அதிக இனிப்புடைய மதுரத்தை, கொண்டவன். நேரிலோ யார் மாட்டுவார்கள், எப்படி அவர்களை முள்ளாய் குத்தலாம் என்று காத்து இருப்பவன். பலாப்பழத்திற்கு நிகரானவன். ஆனால் அவனுள் இருக்கும் இனிப்பை உணரும் முன்பே, அவனை தீண்டியவர்கள் காயப்பட்டு விலகி விடுவார்கள்.பெரும் கோபக்காரன்!நாயகி: “தேன்விழி கண்ணப்பிரான்”காந்தமாய் இழுக்கும், தேன்நிற விழிகளுக்கு சொந்தக்காரி. காலத்தின் சதியால், கரடுமுரடான பாதையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவள், அதன் பலனாக பெண்மையின் மென்மையை தொலைத்து, முற்றிலும் முரடாகவே மாறிவிட்டு இருந்தாள். பழகுவதற்கு சிறிதும் இனிமையானவள் இல்லை.சிடுசிடு சிடுமூஞ்சி!Anti Hero Weds Rugged Heroine Teaser:1வேதாந்த் அதிமதுரனின் கார், நாளை திறக்கப்பட உள்ள, அவனுடைய மகாபலிபுரம் ரிசார்ட்டினுள் நுழைந்தது.அங்கு நாளை திறப்பு விழாவிற்கான அலங்காரங்கள் நடந்துக்கொண்டு இருக்க, உள் நுழைந்தவன், “அஷ்வின்,”, என்று போட்ட பெரும் சத்தத்தில், அவன் அடித்துபிடித்து ஓடிவந்து, அந்த ஹாலிற்குள் அடியெடுத்து வைத்த நொடி, “வாட் த ஃப,”, என்று ஆரம்பித்தவன், நிறுத்தி, “வாட் த ஹெல் ஈஸ் கோயிங் ஆன் ஹியர் அஷ்வின்”, என்று கத்த.”பாஸ், என்ன ஆச்சு,?, எல்லாமே கரெக்டா தானே இருக்கு,?”, என்ற அஸ்வின் பதட்டத்துடன், ‘ஐயோ எங்க சொதப்பல் நடந்து இருக்கு தெரியலையே’, என்று சுற்றி முற்றி, ‘என்ன தவறு?’, என்று பார்க்க.அதிமதுரன், “என்ன கரெக்டா இருக்கு? எல்லாமே தப்பா இருக்கு. என்ன செக் பண்ணீங்க அஷ்வின்?”, என்று வார்த்தைகளை முடிந்தளவு கண்ணியமாக கையாண்டவனால், அதை உதிர்க்கும் தொணியை என்ன முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை!”Floral decoration இன்சார்ஜ் யார்? உடனே வர சொல்லுங்க”, என்று ஒவ்வொரு வார்த்தையையும், பற்களுக்கு இடையில் வைத்து கடித்து, துப்பினான்.அதைத்தொடர்ந்து, பூ அலங்காரம் யாரின் பொறுப்பு என்று பார்க்க? அடுத்த இரண்டு நிமிடத்தில், அவன் முன்பு தேன்விழி வந்து நின்று இருந்தாள்.ஏற்கனவே கோபமாக இருந்தவனுக்கு, தன் முன்பு வந்து நின்றிருந்தவளை, பார்த்த அடுத்த கணமே, இன்னும் பித்தம் தலைக்கு ஏறியது. நேற்றும், இன்றும் அவன் வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை, தேன்விழி அவள் அறியாது, அதிவேகமாக திருப்பி இருந்தாள்.அவளுக்கும் உள்ளுக்குள் ‘மீண்டும் இவனா!?’ என்று தூக்கிவாரிப்போட்டது. ‘எதுக்கு இவன் இங்க வந்து இருக்கான்? ஏன் நம்மளை கூப்பிட்டு விட்டான்? வரிசையாக சந்தேகத்தை அடுக்கிக்கொண்டே போக!இறுதியில், ‘இவனுக்கு எதுக்கு நாம பயப்படனும்?’ என்று நினைத்தவள்,தன்னை பார்த்து முறைக்கும், அதிமதுரனை பார்த்து, இப்பொழுது அவளும் முறைக்க ஆரம்பித்தாள். மறுகணம், “இடியட்,”, என்ற வேதாந்த் அதிமதுரனின், வலது கரம், கொஞ்சமும் யோசிக்காது, இடியென்று தேன்விழியின் இடது கன்னத்தில், இடியாக இறங்கிவிட்டது.இதை சற்றும், ஒருவரும் எதிர்பார்க்கவில்லை.சரியாக முப்பது வினாடிகளுக்கு பிறகு தான் தேன்விழிக்கு, அவளை அதிமதுரன் கை நீட்டி அறைந்திருந்ததே விளங்கியது.வலியில் அவள் கண்முன்பு பூச்சிகள் வேறு பறந்தது.வாழ்வில் முதல்முறை அவளை ஒருவன் அறைந்து இருக்கின்றான்!வினாடியில் அதிமதுரனின், கோட் காலர் பற்றி இழுக்கப்பட்டது.என்னவென்று அதிமதுரன் பார்ப்பதற்குள், அவனை மொத்தமாக தன் புறம் பற்றி இழுத்திருந்த தேன்விழி, யாருமே எதிர்பாராத விதமாக, தன் முழு பலத்தையும் தன் கரத்திற்கு கொடுத்து, சப்பென்று, அதிமதுரனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.அதில், ஏற்கனவே அங்கு ஒன்றும் புரியாது மூச்சடைத்து நின்று இருந்தவர்களுக்கு, மொத்தமாகவே அவர்களின் இதயம் நின்று விடும் போல் ஆகிவிட்டது.எலியும் பூனையுமாக, அடித்து கொண்ட இருவரும், எவ்வாறு காதல் பறவைகளாக மாறினர் என்பதை கதையில் பார்க்கலாம்!முரணும் முரணும், முட்டி மோதி சேர்ந்து, தங்களை சுற்றி காதல் அரண் அமைக்கப்போகும் இனிய பயணம்!